விஜய் நடிகை வர்ஷா கொதிப்பு..தங்கச்சிக்கு பெப்பர் ஸ்பிரே  தாங்க..

by Chandru, Dec 4, 2019, 17:14 PM IST
Share Tweet Whatsapp

வெற்றிவேல், யானும் தீயவன், 96, சீமத்துரை போன்ற படங்களில் நடித்ததுடன் விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்தவர் வர்ஷா பொல்லம்மா. இணைய தள பக்கத்தில் இணைந்திருக்கும் வர்ஷா மென்மை யான போக்கையே கடைபிடித்து வந்தார். பிகில் படத்திற்கு பிறகு அதிரடியாக கருத்துக்கள் பதிவிடத் தொடங்கி உள்ளார்.

சமீபத்தில் ஐதராபாத்தில் டாக்டர் திஷா கடத்தி எரித்து கொலை செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் பிரமுகர்கள் மற்றும்  நடிகர் சிரஞ் சீவி, நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக வர்ஷா இணைய தள பக்கத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

'உங்கள் தங்கைகளுக்கு பெப்பர் ஸ்பிரே பரிசளியுங்கள். அது மிகவும் விலை குறைவானது, நம்ம விஜய் அண்ணன் சொன்னதுபோல் ஹேஷ் டேக்கை டிரெண்ட் செய்யுங்கள்' என தெரிவித்தி ருப்பதுடன் ஜஸ்டிஸ் ஃபார் திசா எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.


Leave a reply