கவுதமை கண்டுகொள்ளாத சூர்யா? கதை சொல்லியும் மவுனம்..

Suriya to join hands with Gautham Menon again?

by Chandru, Dec 5, 2019, 17:21 PM IST
தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. சமீபத்தில் அப்பிரச்னை தீர்ந்து ஒருவழி யாக தியேட்டருக்கு வந்தது.
ஆறிப்போன கஞ்சு பழங்கஞ்சி கதையாக என்னதான் கவுதம்மேனன் முத்திரை தனுஷ் நடித்த அசுரன் படத்தின் 100 கோடி வசூல் என்ற பிளஸ் பாயின்ட்கள் இருந்தும் எனை நோக்கி பாயும் தோட்டா எதிர்பார்த்த வேகத்தில் பாயவில்லையாம். ரசிகர் களிடம் அதிக வரவேற்பு கிடைக்க வில்லை.
ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை குயின் பெயரில் வெப் சீரிஸாக இயக்கும் கவுதம் மேனன் 'ஜோஷ்வா இமைபோல் காக்க' என்ற துப்பற்றியும் த்ரில்லர் படத்தை இயக்குகிறார். சூர்யா நடித்த காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களை இயக்கிய கவுதம் மேனன் மீண்டும் சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கூறி வந்தார். வழக்கமாக தான் இயக்கும் படங் களின் கதைகளை ஹீரோவுக்கு சொல்லா மல் கவுதம் தவிர்த்துவிடுவார்.
ஹீரோக் களம் சொன்னதை நடித்துவிட்டு போய் விடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் சூர்யாவின் கால்ஷீட்டை பெறுவதற்காக கவுதம் மேனன் தனது கதையை சொன்ன துடன் வெளிப்படையாக , இசை கலைஞனாக சூர்யா நடிக்க உள்ளதாக தெரிவித்தார். ஆனால் இதுபற்றி சூர்யா கண்டுகொள்ளாமல் வேறு இயக்குனர்கள் படங்களில் நடித்து வருகிறார்.
சுதா கொங்கனா இயக்கும் சூரரைப்போற்று படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து வெற்றிமாறன் படத்திலும், இயக்குனர் பாலா படத்திலும் நடிக்க விருப்பதாக கோலிவுட்டில் பேச்சு உள்ளது. எனவே கவுதம் மேனனுக்கு இப்போதைக்கு கால்ஷீட் தர சூர்யா தயாராக இல்லைபோல் தெரிகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை