தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் ஒருவரை திட்டமிட்டு டூவீலரை பஞ்சர் செய்து உதவி செய்வதாக கூறி கடத்தி சென்று திட்டமிட்டு கடத்தி பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் முகமது ஆரிப், சென்ன கேசவன், கிளீனர்கள் சிவா, நவீன் ஆகிய 4 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று காலை சம்பவம் நடந்த இடத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டபோது போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்த தப்பி செல்ல முயன்றபோது என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் போலீசாரை பாராட்டி நடிகர், நடிகைகள் இணைய தளத்தில் தங்கள் கருத்தகளை பகிர்ந்துவருகின்றனர்.
தமிழ் நடிகர் விஷால் கூறும்போது,' முடிவில் நீதி வழங்கப்பட்டது. தெலங்கானா போலீசாருக்கு எனது நன்றி' என தெரிவித்திருக்கிறார். அதேபோல் நடிகர் விவேக் கூறும்போது,'தங்கையின் ஆத்மா சாந்தியடையும். இதுபோன்ற எண்ணம் கொண்டோருக்கு இதுவொரு பாடமாக அமையும். போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு பெரிய சல்யூட்' என தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கு நடிகர்கள் நாகார்ஜூனா,' இன்று காலை எழுந்தபோது நீதி வழங்கப்பட்டதை அறிந்தேன்' என குறிப்பிட்டிருக்கி றார். நடிகர் அல்லு அர்ஜூன்,'நீதி வழங்கப்பட்டது' என்றும், நடிகர் நானி,'நகரத்துக்கு ஒரு ரவுடி தேவை அந்த ரவுடி போலீசாக இருக்க வேண்டும்' என்றும். நடிகர் ஜூனியர் என்டிஆர், 'நீதி வழங்கப்பட்டது. திஷா ஆன்மா சாந்தி அடையட்டும்' எனவும் பாராட்டி உள்ளனர்.
நடிகை சமந்தா கூறும்போது,' தெலங்கானா போலீசாரை நேசிக்கிறேன். பயம்தான் பெரிய தீர்வு சில சமயம் அது ஒன்றுதான் தீர்வு' என தெரிவித்தள்ளார்.
'பலாத்காரம் போன்ற குற்றங்களை செய்துவிட்டு எவ்வளவு தூரம்தான் குற்றவாளிகள் ஓடிவிட முடியும். திஷாவுக்கு நீதி கிடைத்தது. தெலங்கானா போலீஸின் என்கவுன்டருக்கு நன்றி' என நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூறி உள்ளார். இதுபோல் ஏராளமான நட்சத்திரங்கள் தெலங்கனா போலீசாரை பாராட்டி வருகின்றனர்.