நடிகர் விஜயகாந்த் மகன்  நிச்சயதார்த்தம்...விரைவில் திருமணம்...

by Chandru, Dec 7, 2019, 18:17 PM IST
Share Tweet Whatsapp
நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவராக இருக்கிறார். இவரது மனைவி பிரேமலதா. இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.  தந்தை விஜயகாந்த், தாய் பிரேமலதா வழியில் விஜயபிரபாகரன் அரசியலில் ஈடுபட்டிருப்பதுடன் பேட்மின்டன் அணி ஒன்றின் உரிமையாளராகவும் இருக்கிறார்.
சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சாகப்தம் படத்தில் அறிமுகமான இவர் மதுரைவீரன் படத்தில் நடித்திருந்தார். தற்போது மித்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
விஜயபிரபாகரனுக்கும் கோவை பெரிய நாயகன் பாளையத்தை சேர்ந்த கீர்த்தனா என்பவருக்கும் திருமணம் செய்ய பேச்சு நடந்தது. இதையடுத்து  நேற்று கோவை யில் விஜயபிரபாகரன், கீர்த்தனா திருமண நிச்சயதார்த்தம்  எளிமையாக நடந்தது. விஜயகாந்த் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வில்லை. பிரமேலதா மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Leave a reply