2 வது திருமணம் செய்த தமிழ் நடிகைக்கு வளைகாப்பு.. 2 குழந்தையுடன் முதல் கணவரை பிரிந்தவர்..

by Chandru, Dec 7, 2019, 18:30 PM IST
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று கவுண்டமணி ஒரு படத்தில் பேசும் வசனம் போல் விவாகரத்து, மறுமணம் போன்றவை கூட சினிமாவில் இதெல்லாம் சாதாரமணப்பா என்றாகி விட்டது. கருத்து வேறுபாடால் பிரியும் நட்சத்திர தம்பதிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
90களில் பாளையத்து அம்மன், வேதம், ஆண்டான் அடிமை போன்ற பல படங்களில் நடித்தவர் திவ்யா உன்னி. இவருக்கும் டாக்டர் சுதிர் ஷேகராவுக்கும் சென்ற 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. ஆனாலும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.
பின்னர் 2018ம் ஆண்டு அருண்குமார் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் திவ்யா . தற்போது கர்ப்பமாக இருக்கும் திவ்யாவுக்கு கேரள முறைப்படி வளைகாப்பு நடந்தது. விரைவில் தனது 3வது குழந்தைக்கு திவ்யா உன்னி அம்மாவாக உள்ளார்.
அருண்குமாருடன் திவ்யாஉன்னி அமெரிக்காவில் ஹுஸ்டன் நகரில் வசித்து வருகிறார்.
நடன பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.


More Cinema News