நடிகை இலியானாவை 'நண்பன்' படத்திற்கு பிறகு தமிழில் காண முடிய வில்லை. தெலுங்கிலும் பிஸியாக நடித்து வந்தவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த தால் இந்தியில் நடிக்கச் சென்றார். பாலிவுட் போன வேகத்தில் ரன்பீர் கபூருடன் அவர் நடித்த, பர்பி படம் பெரிய வெற்றி அடைந்தது.
இதையடுத்து இந்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிடுவார் என்று எண்ணினர். ஆனால் நிலைமை வேறுவிதமாக அமைந்தது. பாலிவுட் பிரபல ஹீரோவின் 3 படத்தில் நடிக்க மறுத்ததால் நிலைமை தலைகீழ் ஆனது.
ஷாருக்கான், ஆமிர்கான், சல்மான்கான் என மூன்று 'கான்' நடிகர்களை சுற்றி பாலிவுட் சினிமா சுழன்று வருகிறது. இவர்களில் சல்மான்கான் நடித்த கிக், வான்டட் ஆகிய 2 படங் களில் ஹீரோயினாக நடிக்க இலியானா வுக்கு வாய்ப்பு வந்தது. நேரம் சரியில்லா விட்டால் ஒட்டகத்தில் உட்கார்ந்தாலும் நாய் கடிக்கும் என்பதுபோல் சல்மான் கான் படத்தை வேண்டாம் என்று மறுத்த இலியானாவுக்கு அன்று முதல் ஏழரை ஆரம்பமானது.
பெரிய ஹீரோக்கள் யாருமே இலியானாவை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் இலியானாவால் பாலிவுட்டில் தாக்குபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 2ம் கட்ட ஹீரோக்கள் படங்கள் மட்டுமே இலியானாவுக்கு வந்தது. அப்படங்களும் எதிர்பார்த் தளவுக்கு வெற்றி பெறவில்லை.
சில தினங்களுக்கு முன் ஜான் ஆப்ரகாம் ஜோடியாக இலியானா நடித்த பாகல்பந்தி என்ற படம் வெளியாகி தோல்வி அடைந்தது. இதனால் இலியானாவுக்கு புதிய படம் எதுவும் இல்லாமல் வீட்டில் முடங்கிக்கிடக்கிறார்.