ரஜினி படத்தில்  3 திருநங்கைகள் பாடிய பாடல்..  அனிருத் அளித்த வாய்ப்பால் மகிழ்ச்சி..

by Chandru, Dec 7, 2019, 18:51 PM IST
Share Tweet Whatsapp
ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'தர்பார்'. இதில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டார்.
இன்று இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னை யில் நடக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இப்படத்திற்காக எஸ்.பி.பாலசுப்ர மணியம், சும்மா கிழி.. என்ற பாடல் பாடி உள்ளார். அது யூடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இன்னொரு பக்கம் விமர்சனங்கள் வந்தாலும் பாடலுக்கான வரவேற்பு அதையும் மிஞ்சிவிட்டது.
தர்பார் படத்திற்காக சிறப்பு ஏற்பாடு ஒன்றை அனிருத் செய்துள்ளார்.  ஐதராபாத்தை சேர்ந்த சந்திரமுகி, ரச்சனா, பிரியா  ஆகிய 3 திருநங்கைகள் இப்படத்தில் பாடல் பாடியுள்ளதுடன் நடனமும் ஆடியிருக்கின்றனர். இவர்கள் சொந்தமாக ஸ்பைஸ் கேர்ள்ஸ் எனும் இசை குழுவை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு அனிருத் வாழ்த்து தெரிவித்துடன் உடனிருந்து புகைப்படத்துக்கும் போஸ் தந்தார்.
 
ரஜினி படத்தில் பாடல் பாட வாய்ப்பு கிடைத்து மகிழ்ச்சியாக இருப்பதாக திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.

Leave a reply