கமல் போஸ்டர் மீது சாணி அடித்த நடிகர்.. எதிர்ப்பால் திடீர் விளக்கம் தந்தார்..

by Chandru, Dec 9, 2019, 18:21 PM IST
Share Tweet Whatsapp
தர்பார் பட ஆடியோ விழாவில் பேசிய நடிகர் லாரன்ஸ்,நான் சிறுவயதிலிருந்தே தலைவரின்(ரஜினி) தீவிர ரசிகன். அவர் படம் ரிலீஸ் ஆகும் போது, போஸ்டர் ஒட்டும்போதும் சண்டை போட்டிருக் கிறேன். இங்கு சொல்வதில் தப்பில்லை. கமல்சார் பட போஸ்டர் ஒட்டினால் அதில்போய் சாணி அடிப்பேன். அப்போது என் மனநிலை மை அப்படி இருந்தது என்றார்.
கமல் போஸ்டர் மீது சாணி அடித்தேன் என்று லாரன்ஸ் பேசியதற்கு கமல் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின் றனர். தனது பேச்சு குறித்து  ராகவா  லாரன்ஸ் விளக்கமளித்துள்ளார்.
 
அதில் அவர் கூறியிருப்பதாவது:
தர்பார் பட  இசை வெளியீட்டு விழாவில் கமல் சார் போஸ்டர் மீது நான் சாணி அடித்தது பற்றி பேசிய பேச்சு மட்டும் சிலர்  பெரிதுபடுத்துகிறார்கள்.  நான் சிறு வயதில் தலைவரின் தீவிர ரசிகனாக இருந்தபோது கமல் சார் பற்றித் தெரியாமல் செய்த விஷயம் அது. கமல் சார் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் எப்போதாவது தவறாகப் பேசியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்பேன்.
 
இங்கு நான் எதுவும் தவறாகப் பேச வில்லை. முழு வீடியோவைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். சிலர் நான் பேசிய தை  திரித்து சொல்கிறார்கள்.  கமல் சாருக்கு என் மனதில் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறேன் என்பது எனக்குத்தான் தெரியும். அதை யாருக்கும் நான் நிரூபிக்க வேண்டிய அவசிய மில்லை. உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால்  நான் தர்பார் விழ்ஹ்வில் பேசிய வீடியோவைப் பாருங்கள்
இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறி உள்ளார்.

Leave a reply