சபரிமலைக்கு சென்றார் சிம்பு.. திரும்பியவுடன் படப்பிடிப்பு..

by Chandru, Dec 10, 2019, 17:39 PM IST
கடந்த ஆண்டு செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்த சிம்பு இந்த ஆண்டில், வந்தா ராஜாவாகத் தான் வருவேன் படத்தில் நடித்திருந்தார். முன்னதாக ஜோதிகா நடித்த காற்றின் மொழி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் அப்படத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சிம்பு நடிக்க மறுத்தார். பின்னர் இதுகுறித்து தயாரிப் பாளர் சங்கத்தில் பட தரப்பினர் புகார் அளித்தனர். அதில் சமரசம் ஏற்பட்ட நிலையில் மாநாடு படம் மீண்டும் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நடிகர் சிம்பு சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு விரதம் மேற்கொண்டு துளசி மாலை அணிந்தார். 40 நாட்கள் விரதம் இருந்த பின் நேற்று ஐயப்ப சுவாமி சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பூஜை முடிந்ததும் தலையில் இருமுடி கட்டி சபரிமலைக்கு சிம்பு புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்த தொட்டி ஜெயா பட இயக்குனர் வி.இசட்.துரை அடுத்து சிம்பு நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ள தாக தெரிவித்திருக்கிறார். சபரிமலையிலிருந்து திரும்பிய பிறகு எந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பது என்பது சிம்பு முடிவு செய்வார் என்று தெரிகிறது.


More Cinema News

அதிகம் படித்தவை