மும்பை சென்று இந்தி பேசாத சமந்தா.. காரணம் இதுதானாம்..

by Chandru, Dec 10, 2019, 22:22 PM IST
Share Tweet Whatsapp
நடிகை சமந்தா தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொள்கிறார்.  இந்த ஆண்டில் சமந்தா நடித்த சூப்பர் டீலக்ஸ் மற்றும் தெலுங்கில் ஓ பேபி, மன்மதடு 2ம் பாகம் ஆகிய தெலுங்கு படங்கள் ரிலீஸ் ஆனது. தற்போது 96 பட ரீமேக்கில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் மும்பையில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிறகு பத்திரிகை, மீடியாக்களுக்கு பேட்டி அளித்தார். மும்பை பத்திரிகையாளர்கள் இந்தியில் கேள்விகேட்டனர். ஆனால் சமந்தா எல்லா கேள்விக்கும் ஆங்கிலத்தில் பதில் அளித்தார்.
 
ஒரு பத்திரிகையாளர், உங்களுக்கு இந்தி  தெரியாதா? ஆங்கிலத்திலேயே பேசுகிறீர்களே என்றார். அதற்கு பதில் அளித்த சமந்தா, இந்தி பேச தெரியும் ஆனால் முறைப்படியான பேச்சு வழக்கு தெரியாது.  தென்னிந்திய நடிகை என்பதால் எனக்கு இந்த பிரச்னை உள்ளது. அதனால்தான் ஆங்கிலத்தில் பதில் அளித்தேன் என்றார்.

Leave a reply