பகவதி அம்மன் கோயிலில் நயன்தாரா.. ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு..

by Chandru, Dec 11, 2019, 21:55 PM IST

நானும் ரவுடிதான் உள்பட பல்வேறு படங்களில் காமெடி வேடத்தில் நடித்த ஆர்.ஜே.பாலாஜி எல்கேஜி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படத்தை இயக்குகிறார். இதில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார்.

ஏற்கனவே இப்படத்தின் பூஜை கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் நடந்தது. அப்போது நயன்தாரா வெளிநாட்டிலிருந்ததால் அதில் பங்கேற்க வில்லை. இந்நிலையில் நேற்று பகவதி அம்மன்கோயிலுக்கு காதலன் விக்னேஷ்சிவனுடன் வந்தார் நயன்தாரா.

நயன்தாரா வரும் தகவலை வெளிப்படுத்தாமல் படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்தனர். நேற்று(09-12-2019) இரவு 7 மணி அளவில் கோயிலுக்கு வந்தார் நயன்தாரா. பகவதி அம்மன் முன்பு சுமார் அரை மணி நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு பின்னர் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து சாமி கும்பிட்டார். அவரது வருகை அறிந்ததும் கோயிலுக்கு வந்திருந்தவர்கள் நயன்தாராவை காண திரண்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரும், படகுழுவினரும் கூட்டத்தினரை கட்டுப்படுத்தினர்.

கோயிலுக்கு வந்து படப்பிடிப்பில் நடிக்க தொடங்கியது முதல் நயன்தாரா விரதம் தொடங்கியிருக்கிறார். படப்பிடிப்பு முடியும்வரை அவர் விரதத்தை தொடர்வார் என்று படக்குழுவினர் கூறினர்.


More Cinema News