ரஜினி பட வில்லன் வாங்கி வந்த வெங்காய ஜிமிக்கி .. மனைவியிடம் அரட்டை கச்சேரி..

by Chandru, Dec 14, 2019, 16:56 PM IST
Share Tweet Whatsapp
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜிமிக்கி கம்மல் என்ற மலையாள பாடல் வீடியோவாக வெளியாகி இந்திய அளவில் வரவேற்பை பெற்றது.  தற்போது வெங்காயத்தில் ஜிமிக்கி கம்மல் செய்து விலைவாசி உயர்வை சுட்டிக்கட்டியிருக்கிறார் இந்தி நடிகர் அக்‌ஷய்குமார். ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்த இவர் இந்தியில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஊரெல்லாம் வெங்காய விலை ஏற்றம் பற்றிய பேச்சாகவே உள்ளது. வெங்காயத்தை லாக்கரில் வைத்து பூட்டுவது, திருமண பரிசாக தருவது என பல்வேறு மீம்ஸ்கள் இணைய தளத்தில் வலைய வந்துக்கொண்டிருக்கிறது. தன் பங்குக்கு வெங்காய விலை ஏற்றம் பற்றிய விஷயத்தை பதிய வைத்திருக்கிறார் அக்‌ஷய்குமார்.
 
வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய அக்‌ஷய்குமார் தனது மனைவி டிவிங்கிள் கன்னாவை அழைத்தபடி வந்தார். அவர் கையில் ஒரு சிறிய பெட்டி இருப்பதை கண்டு ஏதோ டயமன்ட் நெக்லஸ் வாங்கி வந்திருப்பார் போலிருக்கிறது என எண்ணிய டிம்பிளும், இதோ வரேன் என்று குரல் கொடுத்தபடி வந்தார். அவரை அங்கிருந்த ஷோபாவில் உட்காரச் சொன்ன அக்‌ஷய் விலை உயர்ந்த ஒரு பரிசு தரப்போகிறேன் என்றபடி கையிலிருந்த சிறிய பெட்டியை மனைவியிடம் தந்தார். அதை வாங்கி திறந்துபார்த்த டிவிங்கிள் ஷாக் ஆனார்.
 
வெங்காயத்தால் செய்யப்பட்ட ஜிமிக்கி கம்மல் அதில் இருந்ததுதான் அதிர்ச்சிக்கு காரணம். மனைவியிடம் அக்‌ஷய்குமார் அடித்திருக்கும் இந்த அரட்டை நெட்டை கலக்கிக்கொண்டிருக்கிறது.

Leave a reply