குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் மாணவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டிக்காத நடிகர் நடிகைகள் லைப்ட் ரைட் வாங்கியிருக்கிறார் கங்கனா ரனாவத். வாய்மூடி மவுனமாக இருக்கும் நடிகர்கள் தங்களை எண்ணி வெட்கப்பட வேண்டும்.
கோழைகளும், சுயநலவாதிகளும்தான் பாலிவுட் திரையுலகில் நிரம்பி இருக்கின்றனர். ஒரு நாளைக்கு 20 முறை கண்ணாடியைப் பார்ப்பதுதான் அவர்கள் செய்யும் வேலை. எங்களுக்கு எல்லாம் கிடைக்கிறது. மின்சாரம் இருக்கிறது சலுகைகள் உள்ளது, பிறகு ஏன் நாட்டைப் பற்றி கவலைப்பட வேண்டும் என எண்ணுகின்றனர்.
தற்பெருமையாக கூட அதை சிலர் பேசுகிறார்கள். தேசத்தைப் பற்றி எதற்கு கவலைப்பட வேண்டும் என்கிறார்கள். அவர்களிடம் கேள்வி எழுப்பத்தான் நான் இப்போது புறப்பட்டிருக்கிறேன். யாருடைய முதுகு பின்னாலேயோ போய் மறைத்துக்கொள்கிறார்கள். இவர்கள்தான் தேசத்திற்கும், மக்களுக்கும் மேலானவர்கள் நாங்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்
இவ்வாறு சுடசுட கேள்வி எழுப்பி உள்ளார் கங்கனா ரனாவத்.