மோகன்லால் கையில் எலும்பு முறிவு.. துபாயில் அறுவை சிகிச்சை..

by Chandru, Dec 23, 2019, 11:45 AM IST

அரண், ஜில்லா, காப்பான் என தமிழில் சில படங்கள் நடித்திருக்கும் மோகன்லால் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார்.  திர்ஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்து இயக்கும் ராம் என்ற புதிய படத்தில் நடிக்கிறார் .

இதில் அவருக்கு ஜோடியாக. திரிஷா நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்புதான் இதன் பட தொடக்கவிழா நடந்தது.  அதில் கலந்து கொண்டு விட்டு மோகன்லால் துபாய் சென்றார். அங்கு அவர் வலது கையில் திடீர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.  

வலது கையில் மாவு கட்டுடன் ஒரு புகைப் படத்தை மோகன்லால் தனது இணையதள பக்கத்தில்  வெளியிட்டிருக்கிறார். ஆனால் கையில் எப்படி அடிபட்டது என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை.


Leave a reply