அடிமுறை பயிற்சி பெற்ற தனுஷ்-சினேகா இருவரும் சண்டையில் அசத்துகின்றனர்..

by Chandru, Jan 13, 2020, 22:06 PM IST
Share Tweet Whatsapp

அரசுன் படத்தையடுத்து பட்டாஸ் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இதில் தந்தை மகன் என இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் சினேகா, நவீன் சந்திரா, மெஹரீன் பிர்ஸடா, நாசர், முனிஷ் காந்த், சதீஷ் நடிக்கின்றனர்.

கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாக ராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். . விவேக் மெர்வின் இசை அமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பொங்கலுக்கு விருந்தாக வரும் 16ம் தேதி இப்படம் வெளியாகிறது. படத்துக்கு தணிக்கையில் யூ சான்றிதழ் தரப்பட்டுள்ளது.

அந்த காலங்களில் போர் களில் பயன்படுத்தப் பட்ட பழங்கால அடிமுறை என்ற கலையை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக் கிறது. வர்மம், களரி போன்ற கலையான இதனை படத்திற்காக சினேகா. தனுஷ் ஆகியோர் முறைப் படி கற்றுக்கொண்டனர். இதற்காக சிறப்பு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டார். வரும் 16ம் தேதி படம் திரைக்கு வருகிறது.


Leave a reply