கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா.. 83ல் உலகக்கோப்பை வென்ற சரித்திரம் படமாகிறது..

by Chandru, Jan 13, 2020, 22:09 PM IST
Share Tweet Whatsapp

80கள் என்றாலே திரையுலகுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பொற்காலம்தான். பெரிய அளவில் யார் வீட்டிலும் டிவி இருக்காது. அக்கம் பக்கத்து வீடுகளுக்கு சென்று பார்க்கவேண்டும் அல்லது எங்காவது ஷோரூம் சென்று வேடிக்கை பார்க்க வேண்டும். 1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்று சாதனை படைத்தது. அந்த வரலாறு தற்போது 83 என்ற பெயரில் திரைப் படமாக உருவாகிறது. கபீர் கான் படத்தை இயக்குகிறார்.

இந்திய கிரிக்கெட்கேப்டனாக அப்போது கபில் தேவ் இருந்தார். அவரது கதாபாத்திரத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். மனைவியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இதில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி வேடத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்துக்கான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் படத்தை வெளியிட உள்ளனர். ஏப்ரல் 10-ம் தேதி '83' ரிலீஸ் ஆகவுள்ளது.


Leave a reply