கல்யாணம் ஆகாமல் கர்ப்பமான நடிகை.. வயிறு காட்டிகொடுத்தது..

by Chandru, Jan 18, 2020, 20:16 PM IST

புதுச்சேரியில் பிறந்தவர் கல்கி கொச்லின். ஆங்கிலோ இந்தியன். இவர் இந்தியில் கல்லிபாய், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு அஜீத் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் 'காலம்' என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார் கல்கி கொச்லின்.சில வருடங்களுக்கு முன் இந்தி பட இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிருமான அனுராக் கஷ்யப்பை மணந்தார். இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த 2015ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் ஹெர்ஷ்பெலர்க் என்ற பாய்பிரண்டுடன் கல்கிக்கு நட்பு ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களாகவே கல்கி கொச்லின் கர்ப்பமாக இருப்பதாக கிசுகிசு பரவி வந்தது. அதுபற்றி பதில் அளிக்காமல் மவுனம் காத்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மும்பையில் நடந்த டிவி ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரது கர்ப்பம் குறித்து கேட்டபோது ஒப்புக்கொண்டார். '25 வயதிலேயே அனுராக் உடன் எனக்கு திருமணம் நடந்துவிட்டது. அறியா பருவத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. தற்போது நான் 5 மாத கர்ப்பமாக இருக்கிறேன். வெளிநாடுகளில் சிங்கிள் பேரன்ட் என்ற முறையில் திருமணம் செய்யாமலே தங்கள் குழந்தையை வளர்க்கிறார்கள். அது தவறு இல்லை. அதுபோல் என் குழந்தையையும் என்னால் வளர்க்க முடியும். திருமணம் செய்து கொள்வதுபற்றி இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை' என்றார் கல்கி கொச்லின்.


More Cinema News