ரஜினியின் தர்பார் வசூல் குறைந்ததா? நடிகர் சூடான பதிலடி..

by Chandru, Jan 18, 2020, 20:18 PM IST
Share Tweet Whatsapp

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் கடந்த 9 ஆம் தேதி வெளியானது 2 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலானதாக தகவல்கள் வந்தன. ஆனாலும் தர்பார் ஓடவில்லை, வசூல் குறைந்துவிட்டது என சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதுகுறித்த நடிகர் ராகவா லாரன்ஸ் பதிலளித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: தர்பார் படம் சரியாக ஓடவில்லை. படத்திற்கு வசூல் குறைவாகவே வந்துள்ளதாகவும் சிலர் திட்டமிட்டு பொய் பரப்பினாலும் தர்பார் படம் பாக்ஸ் ஆபிசில் பெரும் வசூலை ஈட்டியுள்ளது. மேலும் இலைய கைல மறைக்கலாம், ஆனா மலைய மறைக்க முடியாது. மலைடா அண்ணாமலை.. அந்த ஆண்டவனே நம்ப பக்கம்' என தெரிவித்திருக்கிறார்.


Leave a reply