காரில் வந்து அரசு பஸ்ஸில் ஏறிய நடிகை.. பயணிகள் பரபரப்பு..

by Chandru, Jan 18, 2020, 20:20 PM IST
Share Tweet Whatsapp

கேரளாவில் திருவனந்தபுரம் மத்திய பஸ் நிலையத்துக்கு சிவப்பு கார் ஒன்று வந்து நிற்க அதிலிருந்து ஒரு பெண் இறங்கினார். ஹெட்போன் காதில் மாட்டிக்கொண்டு கழுத்தில் பை மாட்டிக் கொண்டு அரசு பஸ்ஸை நோக்கி நடந்தவர் அங்கிருந்த பஸ்ஸில் ஏறினார்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த பஸ்ஸிலிருந்து இறங்கி இன்னொரு பஸ்ஸில் ஏறினார். பஸ் புறப்பட்ட தயார் ஆனதும் பஸ்ஸிலிருந்து பெண் இறங்கிவிட்டார்.
பஸ்ஸில் ஏறி இறங்கிய அந்த பெண் நடிகை மஞ்சு வாரியர் என்பது தெரிந்ததும் பயணிகள் பரபரப்பாகினர். அவரை ஒரு சிலர் வீடியோ எடுக்கத் தொடங்கினார். இதையெல்லாம் கண்ட மஞ்சு வாரியர் உடனடியாக ஏற்கனவே வந்த காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இந்த பரபரப்பெல்லாம் சதுர்முகம் படத்துக்கு படமாக்கப்பட்ட காட்சிதான் என்பது பின்னர் தெரியவந்தது. கடந்த வாரம் இதே படத்துக்காக ஆக்‌ஷன் காட்சியில் நடித்தபோது தான் மஞ்சுவாரியருக்கு காலில் அடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a reply