இலியானாவுக்கு நெட்டிஸன்கள் அட்வைஸ்.. கோபத்தில் பொங்கி எழுந்தார் நடிகை..

by Chandru, Jan 20, 2020, 15:52 PM IST

நண்பன், கேடி படங்களில் நடித்ததுடன் தெலுங்கில் பிரபல நடிகர்களுடன் பிஸியாக நடித்து வந்த இலியானா திடீரென்று தென்னிந்திய சினிமாவுக்கு முழுக்குபோட்டு இந்தி படங்களில் நடிக்கச் சென்றார். ஆரம்பத்தில் கிடைத்த வரவேற்பு ஒன்றிரண்டு படங்களுக்கு பிறகு அங்கு கிடைக்காத நிலையில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பட வாய்ப்புகளை ஈர்ப்பதாக வெளிநாடு பாய்பிரண்டுடன் காதல் என்று கிளப்பிவிட்டதுடன், கவர்ச்சி படங்களை வெளியிட்டார். ஒரு கட்டத்தில் காதலும் முறிந்துபோனது. நினைத்தபடி எதுவும் நடக்காததால் அப்செட் ஆனார்.

இலியானா தனது வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொண்டால் நல்ல பலன் இருக்கும் என்று நெட்டிஸன்கள் அவருக்கு பக்கம் பக்கமாக அறிவுரைகள் செய்யத் தொடங்கினர். அதைக்கண்டு கடுப்பான இலியானா நெட்டிஸன்களை லெப்ட் ரைட் வாங்கிவிட்டார்.

இதுபற்றி இலியானா கூறும்போது, 'எனக்கு அட்வைஸ் செய்ய நீங்கள் யார்? எனக்கான பில் தொகையை செலுத்துபவரா நீங்கள். எனக்கு சிக்கன் கூட வாங்கிதர முடியாத நிலையில் இருக்கும் நீங்கள், நான் என்ன செய்ய வேண்டும் என்று அட்வைஸ் செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறது. வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தால் அதது எப்படி நடக்க வேண்டுமோ அப்படியே நடக்கும்' என கூறி இருக்கிறார் இலியானா.


More Cinema News