கிராமகா கலை கற்று மோதலில் ஈடுபட்ட அமலாபால்.. நடுகாட்டில் அதிரடி..

by Chandru, Jan 20, 2020, 15:54 PM IST

ஆடை படத்துக்கு பிறகு அமலாபால் நடிக்கும் புதிய படம் 'அதோ அந்த பறவை போல.' கே.ஆர்.வினோத் இயக்கி உள்ளார். மைனா படத்தை தயாரித்த ஜோன்ஸ் தயாரித்திருக்கிறார். அருண் கதை எழுதி உள்ளார். நடுக்காட்டில் சிக்கிக்கொண்டு வெளியில் வர வழி தெரியாமல் தவிக்கும் பெண்ணாக அமலாபால் நடித்திருக்கிறார். ஆனாலம் துணிச்சலான கதாபாத்திரம் என்பதால் ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடியாக நடித்திருக்கிறார். இப்படத்திற்காக கிராமகா எனப்படும் புதுவகை மார்ஷல் ஆர்ட் கலையை அமலாபால் கற்று தேறினார். அந்த பயிற்சிக்கு பின் அடர்ந்த காட்டு பகுதியில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார்.

இதுபற்றி அமலாபால் கூறும்போது,'இப்படத்தில் நான் ரிஸ்க் எடுத்து கஷ்டப்பட்டு நடித்ததாக கூறுகிறார்கள். பட குழுவினர் கட்ட கஷ்டத்தைவிட நான் அதிகம் கஷ்டப்படவில்லை. இயக்குனர் கே.ஆர்.வினோத் டீம் இளைஞர்களை கொண்டதாக இருந்ததால் வேகமாக பணிகள் நடந்தது. பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கராத்தே, குங்பூ போன்று எதாவது ஒரு கலையை கற்றுக்கொள்ள வேண்டும். இப்படத்தில் அதை வலியுறுத்துவிதமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே நான் துணிச்சலாக ஆக்‌ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்தேன். இப்படத்தில் கிராமகா என்ற கலையை மையமாக வைத்துதான் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் பேசும்படி இருக்கும். இந்த படத்திற்காக நான் கற்றுக்கொண்ட மார்ஷல் ஆர்ட்ஸ் கலை என் வாழ்நாள் பூராவும் மறக்காது. இக்காட்டான ஒரு இடத்தில் சிக்கிக்கொண்டாலும் அவர்களை தாக்கிவிட்டு என்னால் தப்பித்து வர முடியும். இந்த தைரியம் பெண்கள் மத்தியில் வரவேண்டும் என்பதை இப்படத்தின் நோக்கம்.
ஆடை படம் ஏ சான்றிதழ் என்றதால் சிலர் தியேட்டருக்கு வர தயங்கினார்கள். அதோ அந்த பறவை படத்துக்கு தணிக்கையில் பூ சான்றிதழ் கிடைத்துள்ளது. சினிமாவில் தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பேன். ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் படங்கள் கதை பிடித்திருந்தால் நடிப்பேன். டைரக்‌ஷன் ஆசை உள்ளதா என்கிறார்கள். அந்த எண்ணமெல்லாம் இல்லை. ஆனால் இந்தியா முழுவதும் பேசப்படும் சிறந்த நடிகையாக வேண்டும்' என்றார்.

இவ்வாறு அமலாபால் கூறினார்.


More Cinema News