விஸ்வாசம் பாடகரின் இசை பயணம்.. சென்னை, கோவை, கொச்சியில் கானமழை..

by Chandru, Jan 23, 2020, 20:16 PM IST

சமீபகாலமாக இளம் பாடகர் சித் ஸ்ரீராம் கோலிவுட்டில் பரபரப்பான பாடகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். விஸ்வாசம் படத்தில் அவர் பாடிய கண்ணான கண்ணே என் மீது சாயவா.. பாடல் அவரை மேலும் உயர்த்தியிருக்கிறது. அவர் ஆல் லவ் நோ ஹேட் என்ற தனது இசை பயணத்தை தொடங்கியிருக்கிறார்.

2013ல் வெளியான கடல் திரைப்படத்தில் இடம்பெற்ற அடியே பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமான சித் ஸ்ரீராம், விஸ்வாசம் படத்தில் கண்ணான கண்ணே என் மீது சாயவா... போன்ற பாடலில் தனித்துவமான குரல்வளம் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனங்களை வென்றிருக்கிறார். முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். வருகின்ற பிப்ரவரி மாதம் 8ம் தேதி சென்னையில் இருந்து துவங்குகிறார். நாய்ஸ் அண்ட் கிரையன்ஸ் (Noise and Grains) நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிறுவனம் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஏ ஆர் ரஹ்மானின் நெஞ்சே எழு, இளையராஜாவின் இளையராஜா 75, அனிருத்தின் சிங்கப்பூர் லைவ், நடிகர் விஜய் சேதுபதியுடன் 'நம்ம ஊரு ஹீரோ', எஸ் பி பாலசுப்பிரமணியம் - யேசுதாசுடன் 'வாய்ஸ் ஆப் லெஜண்ட்ஸ்' இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஆண்ட்ரியா, சின்மயி, ஹரிஹரன், ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் பலருடன் இணைந்து மடை திறந்து இசை நிகழ்ச்சி தொடர்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 8ம் தேதி சென்னையில் தொடங்கும் சித்ஸ்ரீராம் இசைப் பயணம், அதனை தொடர்ந்து பிப்ரவரி 23ம் தேதி கொச்சி, மார்ச் 7ம் தேதி மதுரை மற்றும் மார்ச் 13ம் தேதி பெங்களூரிலும் நடைபெறவிருக்கிறது.


More Cinema News