யாஷிகாவின் வெயிட் லிஃப்ட் சவால்.. ரசிகர்கள் அளித்த ரகளை பதில்..

by Chandru, Jan 23, 2020, 20:20 PM IST

இளவட்டங்களின் கனவு கன்னியாக இருக்கிறார் யாஷிகா. இணைய தளபக்கத்தில் பிஸியாக இருக்கும் யாஷிகா தனது கவர்ச்சி அலையால் இளவட்டங்களை வாரிச் சுருட்டுகிறார். யாராவது ஓவராக கலாய்த்தால் சேலை கட்டி அம்சமாக படம் வெளியிட்டு திட்டிய வர்களின் வாயை அடைத்து விடுகிறார்.

இந்நிலையில் தனது இணைய தள பக்கத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டார் யாஷிகா. அதில் அதிக வெயிட் ஒன்றை தூக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இவ்வளவு பெரிய வெயிட்டை உங்களால் தூக்க முடியுமா புரோ என்று அவர் ரசிகர்களிடம் சவால் விட்டு கேள்வி எழுப்பினார்.

அதற்கு சில ரசிகர்கள், நாங்கள் உங்கள் புரோ அல்ல, ரசிகர்கள். இந்த வெயிட்டென்ன இதைவிட அதிக வெயிட்டையும் தூக்குவோம் அத்துடன் சேர்த்து உன்னையும் தூக்குவோம் என ரகளை செய்திருக்கின்றனர்.


More Cinema News