ஹாலிவுட் நடிகை பமீலாவுக்கு 5வது திருமணம்.. 72 வயது தயாரிப்பாளரை மணந்தார்..

by Chandru, Jan 23, 2020, 20:25 PM IST

ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சனுக்கு 52 வயதாகிறது. அவர் கடந்த 35 வருடமாக ஹாலிவுட் தயாரிப்பாளர் ஜோன் பீட்டர் என்பவருடன் டேட்டிங் செய்து வருகிறார்.

டேட்டிங் வாழ்க்கையில் ருசி கண்ட ஜோடி தற்போது திருமணத்தில் இணைந்திருக்கிறது. இது பமீலாவுக்கு 5வது திருமணம். கடந்த 20ம் தேதி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மாலிவு நகரில் இவர்கள் திருமணம் எளிமையாக நடந்தது.
திருமணம்பற்றி பமீலா கூறும்போது,'ஹாலிவுட் ஜோன் பீட்டரை யாருடனம் ஒப்பிட முடியாது. அந்தளவுக்கு உயர்ந்தவர். நாங்கள் 35 வருட டேட்டிங் காலத்தில் எங்களை ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டிருக்கிறோம். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக மரியாதையும், அன்பும் வைத்திருக்கிறோம். இப்போது எங்களை கடவுள் இணைத்து வைத்துள்ளார்' என்றார்.


More Cinema News