தொழில் அதிபரை மணந்த ”சேவற்கொடி” ஹீரோயின்.. கணவருடன் துபாயில் செட்டிலாகிறார்..

by Chandru, Jan 23, 2020, 20:28 PM IST

ஆர்.கே. நடித்த எல்லாம் அவன் செயல், அருண் பாலாஜி நடித்த சேவற்கொடி, அபிநய் வட்டி நடித்த ராமானுஜம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர் பாமா. தமிழில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் மலையாளத்தில் கைநிறைய படங்களுடன் நடித்து வந்தார். படிப்படியாக அங்கும் அவருக்கு பட வாய்ப்பு குறைந்தது. கடந்த 2019ம் ஆண்டில் ஒரு படம்கூட அவருக்கு கைகூடவில்லை. இதையடுத்து அவருக்கு குடும்பத்தினர் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். பாமாவும் சம்மதம் தெரிவித்தார்.

கேரளாவில் பிறந்து கனடாவில் படித்து தற்போது துபாயில் தொழில் அதிபராக இருக்கும் அருண் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன் பாமா, அருண் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்த மாத இறுதியில் திருமணம் நடக்கவிருக்கிறது.
திருமணத்துக்கு பிறகு பாமா கணவருடன் துபாய் புறப்பட்டு சென்று இல்லறத்தில் மூழ்க உள்ளார். திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டி லான நடிகைகள் மீண்டும் ஒன்றிரண்டு வருடம் கழித்து நடிக்க வருவதுபோல் பாமாவும் சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரலாம் என படவுலகில் பேசப்படுகிறது.


More Cinema News