காமெடி ரொமான்ஸ் கதாநாயகனாக நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு வித்தியாசமான வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்து ரெமோ படத்தில் நர்ஸ்போல் பெண் வேடம் அணிந்து நடித்தார். அப்படம் பேசப்பட்டது.
அதன்பிறக ஆக்ஷன் ஹீரோ ஆசையில் வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், ஹீரோ போன்ற படங்களில நடித்தார். எதுவும் கைகொடுக்கவில்லை. குடும்பபாங்க நடித்த நம்ம வீட்டு மாப்பிள்ளை இருப்பை தக்க வைத்துக்கொண்டார். இந்நிலையில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படம் ஒன்று பைனான்ஸ் பிரச்னை காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. தற்போது அப்படத்தை விரைந்து முடிக்க முடிவு செய்திருக்கும் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தையும் விட்டு கொடுத்து நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையடுத்து பைனான்ஸ் பிரச்னைகள் முடிவுக்கு வந்து இப்படம் மீண்டும் தொடங்கப்பட்டிக்கிறது. ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா உள்ளிட்டவர்கள் படத்தில் நடிக்கின்றனர்.
சிவகார்த்திகேயனுக்கு வேறு படம் எதுவும் இல்லாத நிலையில் சயின்ஸ் பிக்ஸ்ன் படத்தை பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.