நித்யா மேனனுக்கு உடல்நலன் பாதிப்பு..

by Chandru, Jan 29, 2020, 17:17 PM IST

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த படம் சைக்கோ. இதில் அதிதி ராவ், நிதியா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படம் திரைக்கு வந்து வரவேற்பும், விமர்சனமும் பெற்றிருக்கிறது. இதில் நடித்ததுபற்றி நித்யா மேனன் கூறியதாவது:

சைக்கோ படத்தில் நான் டப்பிங் பேசாமல் நடிப்போடு மட்டும் நிறுத்தியிருந்தால், பாதி உழைப்பு மட்டுமே இருந்திருக்கும். ஆனால் டப்பிங் பேசியது அந்த கதாபாத்திரத்திற்கு முழுமையை கொடுத்திருக்கிறது. இப்படத்தற்கு டப்பிங் பேசி முடிந்த பிறகு எனக்கு தொண்டை தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து இன்னும் நான் மீளவில்லை கொஞ்சம் கொஞ்மாக மீண்டு வருகிறேன்.
இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.

You'r reading நித்யா மேனனுக்கு உடல்நலன் பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை