ரஜினி பாராட்டிய குறும்படம் திரைப்படமானது.. சிரித்தபடி நடிக்கிறார் ஹிப் ஆப்..

by Chandru, Feb 6, 2020, 15:55 PM IST

மீசைய முறுக்கு, நட்பே துணை படங்களுக்கு பிறகு ஹிப் ஆப் ஆதி நடிக்கும் புதிய படம் 'நான் சிரித்தால்'. இப்படத்தை ராணா இயக்குகிறார் . இவர் இயக்குனர் ஷங்கரிடம் 2.0 படத்தில் உதவியாளராக பணியாற்றினார். படம்பற்றி ராணா கூறும்போது,' நான் இயக்கிய, 'கெக்க பெக்ககுறும்படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி பாராட்டினார். அவரின் பாராட்டுத்தான் 20 நிமிட குறும்படம், 'நான் சிரித்தால் பெயரில்' 2.20 மணி நேர திரைப்படமாக மாறியது.

உலக நாடுகளில் அழுத்தத்தில் இருக்கக்கூடிய முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இருக்கிறது. நமக்கிருக்கும் அழுத்தம், தோல்வி, சோகம், கவலைகள், பிரச்னைகள் போன்றவற்றை தள்ளி வைத்து சிரித்தால் எப்படி இருக்கும்? என்பதே நான் சிரித்தால் படம். பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று படம் ரிலீஸ்' என்றார்.
ஆதி கூறும் போது,'இப்படத்தில் நான் சிரித்திருக்கிறேன். எனது கதாபாத்திரத்தின் பெயர் காந்தி. எங்கெங்கெல்லாம் சிரிக்கக் கூடாதோ அங்கெல்லாம் சிரிப்பேன். இதுவொரு சிறப்பான படம். அவ்னி மூவிஸ் நிறுவனம், சுந்தர்.சி கூட்டணியில் இது எனக்கு மூன்றாவது படம். ஆனால், எங்களது மூன்று படங்களுக்கும் மூன்று இயக்குநர்கள். என்னுடைய கனவுகளை இயக்குநர் சுந்தர்.சி நனவாக்கினார். இதற்கு முன் வெளியான இரண்டு படங்கள் வெற்றி பெற்றதற்கு இயக்குநர் சுந்தர்.சி எனக்கு கொடுத்த சுதந்திரம் தான் காரணம். அதே வகையில் இப்படமும் வெற்றிபெறும்' என்றார்.

You'r reading ரஜினி பாராட்டிய குறும்படம் திரைப்படமானது.. சிரித்தபடி நடிக்கிறார் ஹிப் ஆப்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை