டைரக்டர் முருகதாஸ் வீட்டில் அத்துமீறுவதா? விநியோகஸ்தர்களுக்கு செல்வமணி கண்டனம்..

by Chandru, Feb 8, 2020, 18:27 PM IST

தர்பார் படத்தில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அதை தரக்கேட்டு ரஜினிகாந்த் வீடு, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீடுகளை முற்றுகையிட்டு சில விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

விநியோகர்களிடமிருந்து மிரட்டல் வருவதால் தனக்கும், தனது உடமைக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட கேட்டு முருகதாஸ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்நிலையில் இதுகுறித்து பெப்சி (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்) தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று பேட்டி அளித்தார். அவர் கூறும்போது,'பட நஷ்டம், லாபம் என்பது தயாரிப்பாளர், விநியோகஸ்தரைத்தான் சாரும் அப்படத்தில் பணியாற்றிய இயக்குனர், தொழில்நுட்ப கலைஞரை சாராது. அப்படியிருக்கும்போது நஷ்ட ஈடு கேட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் விநியோகஸ்தர்கள் சிலர் அத்துமீறி நடந்துகொண்டது தவறு. படத்தை அளவுக்கு அதிகமாக பணம் கொடுத்து விநியோகஸ்தரக்ள் வெளியிடுகின்றனர். அந்தளவுக்கு வசூல் இல்லாவிட்டால் அதற்கு அவர்கள்தான் பொறுப்பு. விலையை அதிகம் கொடுத்து ஏன் படத்தை அவர்கள் வாங்க வேண்டும்? விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் முறைப்படி அனுமதி பெற்று நடக்கிறது. படப்பிடிப்பை எதிர்த்து அங்கு பாஜ கட்சியினர் போராட்டம் நடத்துவது நியாயமற்ற செயல்' என்றார்.

You'r reading டைரக்டர் முருகதாஸ் வீட்டில் அத்துமீறுவதா? விநியோகஸ்தர்களுக்கு செல்வமணி கண்டனம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை