நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ஷூட்டிங் முடிந்தது.. சம்மரில் ரிலீஸ்..

by Chandru, Feb 8, 2020, 18:30 PM IST

நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கும் படம் மூக்குத்தி அம்மன். ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் கன்னியாகுமரி யில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் தொடங்கியது. பட பூஜையின்போது வெளிநாடு சென்றிருந்த நயன்தாரா பின்னர் அங்கிருந்து திரும்பியவுடன் கன்னியாகுமரி சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார். அம்மன் வேடம் நடிப்பதையடுத்து விரதம் இருந்து வந்ததுடன் படப்பிடிப்பு நேரத்தில் காலில் செருப்பு போடாமல் இருந்தார். இதன் படப்பிடிப்பு தற்போது முடிவ டைந்திருக்கிறது. கன்னியாகுமரி கோயில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கோயில்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இதுபற்றி ஆர்.ஜே.பாலாஜி கூறும்போது,'மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. வரும் கோடைவிடுமுறையில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. அம்மன் படங்களில் இப்படம் புதிய வகையில் கையாளப்பட்டிருக்கிறது' என்றார்.
இதில் ஆர்.ஜே.பாலாஜியும் முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கிறார். கிரிஷ் இசை அமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

You'r reading நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ஷூட்டிங் முடிந்தது.. சம்மரில் ரிலீஸ்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை