ஆஸ்கர் போட்டியில் 11 விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த ஜோக்கர் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந் தது. அந்தளவுக்கு விருதுகளை பெறாவிட்டாலும் சிறந்த நடிகர், சிறந்த இசை என 2 முக்கிய பிரிவுகளுக்கு ஆஸ்கர் வென்றது.
2020ம் ஆண்டின் சிறந்த நடிகர் - நடிகைகளுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டால்பி திரை அரங்கில கலர்புல்லாக இன்று நடந்தது. கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற படம் ஜோக்கர். இதில் ஹீரோவாக நடித்த ஜாக்குயின் பீனிக்ஸ் வித்தியாசமான மேக்அப் அணிந்து கவர்ந்தார். அவர்தான் இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கமான ஆஸ்கர் விருதை வென்றார். ஜூடி என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளியிட்டிருந்த ரெனே ஸெல்விகர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கரை தட்டிச் சென்றார்.
யாரும் எதிர்பாராத விதமாக தென்கொரிய படமான பாராசைட் சிறந்த படம், சிறந்த வெளிநாட்டுபடம் , சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர் என 4 ஆஸ்கர் விருதுகளை வென்று முன்னணி இடத்தை பிடித்தது.
மேலும் விருது பெற்றவர்கள் பட்டியல் வருமாறு:
சிறந்த துணை நடிகர்: பிராட் பிட் ( படம்:ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் ஹாலிவுட்)
சிறந்த துணை நடிகை: லாரா டெர்ன் (படம் மேரேஜ் ஸ்டோரி )
சிறந்த படம்: பாராசைட்
சிறந்த இயக்குனர் :பாரசைட் ( இயக்குனர்: பாங் ஜூன் ஹோ)
சிறந்த ஒளிப்பதிவு: 1917 (ஒளிப்பதிவாளர்:ரோஜர் டிக்னஸ்)
சிறந்த படத் தொகுப்பு: போர்ட் வி பெராரி (மாட் டாமன் மற்றும் கிரிஸ்டியன் பாலே)
சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம் : பாம் ஷெல் (சார்லிஸ் தெஹரன், நிக்கோல் கிட்மேன், மோர்கட் ராப்பி)
சிறந்த பின்னணி இசை : ஜோக்கர்
சிறந்த ஒலித்தொகுப்பு: போர்ட் வி பெராரி (மார்க் டெய்லர், டூவர்ட் வில்சன்)
சிறந்த ஒலிக்கலவை: 1917 (சாம் மென்டெஸ்)விஷுவல் எபெஃக்ட்: : 1917
சிறந்த குறும்படம்: தி நைபர்ஸ் வின்டோசிறந்த பாடல்: ராக்கெட் மேன் (ஐ ஆம் கோயிங் டு லவ்) எல்டன் ஜான், பெர்னி டப்பியன்)
சிறந்த ஆடை வடிவமைப்பு : லிட்டில் உமன்
சிறந்த படத்தொகுப்பு ஒலிப்பதிவு என போர்ட் வி பெராரி 2 விருதுகள் வென்றது.
ஜோக்கர் படம் சிறந்தநடிகர் மற்றும் சிறந்த பின்னணி என 2 ஆஸ்கர் வென்றுள்ளது.போர் முனையை மையமாக உருவான 1917 படம் சிறந்த ஒளிப்பதிவு, ஒலிக்கலவை, விஷுவல் எபெஃக்ட் என 3 ஆஸ்கர் விருது வென்றுள்ளது.
சிறந்த அனிமேஷன் படம்: டாய் ஸ்டோரி 4ம் பாகம்
சிறந்த அனிமேஷன் குறும்படம்:ஹேர் லவ்
சிறந்த தழுவல் திரைக்கதை: ஜோ ஜோ ராபிட்.
சிறந்த குறும்படம்:தி நைபர்ஸ் வின்டோ
சிறந்த ஆக்ஷன் குறும்படம்: ஒன்ஸ் அப் ஏ டைம்.
சிறந்த புரொடக்ஷன் டிசைன் விருது: லிட்டில் உமன்.
சிறந்த காஸ்டியும் டிசைன்: ஜாக்குலின் டுர்ரான்.
சிறந்த ஆவண குறும்படம்: அமெரிக்கன் பேக்டரி பெற்றது.
சிறந்த ஆவண குறும்படம்: லியர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் எ வார்ஜோன்.