தமிழில் மெட்ராஸ், கதகளி, கணிதன், கடம்பன் போன்ற படங்களில் நடித்திருக்கும் கேத்ரின் தெரசா கைவசம் பெரிய படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறார். விஜய தேவரகொண்டாவுடன் வேர்ல்டு பேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
தெலுங்கில் சீனியர் நடிகர் என்.டி. பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க இளம் நடிகையை தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் இதுவரை ஓகே சொல்லவில்லை. ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்த சோனம்கபூர் நடிப்பார் என்று கூறப்பட்டது. இதை கேள்விபட்ட அவர் டிவிட்டரில் பொங்கிவிட்டார். என்.டி. பாலகிருஷ்ணாவுடன் நான் நடிக்கவில்லை என்று மெசேஜ் வெளியிட்டார்.பிறகு ஸ்ரேயா நடிப்பதாக கூறப்பட்டது. அதை பட தரப்பு உறுதி செய்யவில்லை.
இந்நிலையில் கேத்ரின் தெரசா நடிப்பதாகவும் அதற்காக ரூ. 1 கோடி சம்பளம் தருவதாகவும் சொல்லப்பட்டது.
கேத்ரின் தெரசாவிடம், என்.டி.பாலகிருஷ்ணாவுடன் நடிக்கிறீர்களா என்றபோது ஷாக் ஆனார். கோபத்துடன் பதில் அளிக்க தொடங்கியவர் 'யாரிடம் இப்படி கேட்கிறீர்கள். இந்த கேள்வியை சம்பந்தப்பட்ட பட டைரக்டரிடமோ அல்லது தயாரிப்பாளரிடமோ கேளுங்கள். நான் பதில் செல்ல மாட்டேன் 'என்று கூறினார்.