விஜய் மாஸ்டர் செல்பி இந்திய அளவில் டிரெண்டிங்.. ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு

by Chandru, Feb 11, 2020, 20:34 PM IST

விஜய் நடிக்கும் மாஸ்டர்படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். டெல்லி. கர்நாடகா போன்ற இடங்களில் நடந்த படப்பிடிப்பை விட நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பு பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையும் அவரை வருமான வரித்துறையினர் நடத்திய விதமும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் படப்பிடிப்புக்கு திரும்பிய உடன் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நெய்வேலி சுரங்கம் எதிரில் திரண்டனர். அவ்வப்போது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதை கேள்விப்பட்ட விஜய் படப்பிடிப்பிலிருந்து வெளியில் வந்து ரசிகர்களை சந்தித்தார். பிறகு அங்கிருந்த வேன் மீது ஏ றி ரசிகர்களை யும் சேர்த்து செல்பி எடுத்தார். பின்னர் அந்த செல்பியை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டார். தற்போது அந்த செல்பிதான் டிரெண்டாகி இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க மாஸ்டர் படத்தின் அடுத்த சிங்கிள் ட்ராக் வரும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியிடப்பட உள்ளது. ஒரு குட்டி கதை என்ற பாடலை வெளியிட உள்ளனர். இது ரசிகர்களி டையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது


Leave a reply