யோகி பாபுக்கு தங்க சங்கிலி அணிவித்த தனுஷ்.. கல்யாண பரிசு..

by Chandru, Feb 12, 2020, 17:13 PM IST

தனது திருமணம் நடக்குமா. நடக்காதா? என்று தெரியாமல் கடந்த வாரம் வரை காமெடி நடிகர் யோகிபாபு தவித்து வந்தார்.

மஞ்சு பார்கவியை மணக்கப்போகிறார் என்று இணைய தளத்தில் தகவல்கள் வெளிவந்தபோதும் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று யோகிபாபுவே தனது இணைய தள பக்கத்தில் கருத்து தெரிவித்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தனது குலதெய்வ கோயிலில் மஞ்சு பார்கவியை ரகசிய திருமணம் செய்துகொண்டார் யோகிபாபு. இதில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த விவரம் நெட்டில் வெளியான பிறகே திருமணம் பற்றி ஒப்புக்கொண்டார். குடும்ப சூழல் காரணமாக திருமணத்தை இப்படி எளிமையாக நடத்த வேண்டியிருந்தது. வரும் மார்ச் மாதம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவேன். அதற்கு திரையுலகினர் அனைவரையும் அழைப்பேன் என்று தெரிவித்தார் யோகிபாபு. திருமணம் முடிந்து ஒரு சில நாட்களிலேயே அவர் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.

நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் படப்பிடிப்பில் யோகிபாபு கலந்துகொண்டு நடித்தார். அப்போது அவருக்கு வாழ்த்து கூறிய தனுஷ் தனது சார்பில் தங்க சங்கிலியை அவருக்கு திருமண பரிசாக கழுத்தில் அணிவித்து கைகுலுக்கி வாழ்த்து கூறினார். பின்னர் கேக் வெட்டி திருமண விழாவை படப்பிடிப்பு தளத்தில் யோகி பாபு கொண்டாடினார்.


Leave a reply