சூர்யாவுடன் விமானத்தில் பறக்கும் 100 குழந்தைகள்.. நாளைக்கு வங்காள விரி குடாவை வட்டமடிக்கின்றனர்..

by Chandru, Feb 12, 2020, 17:10 PM IST

விமான நிறுவன அதிபராக சூர்யா நடிக்கும் படம் சூரரைப்போற்று. இப்படத்தை சுதா கொங்காரா இயக்குகிறார். இப்படத்தின் ஆடியோ நிகழ்ச்சியை புதுமையாக நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

நாளை (13ம் தேதி) சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சூரரைப்போற்று படக்குழுவினர் சூர்யாவுடன் குவிகின்றனர். அவர்களுடன் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் உதவியுடன் கல்வி பயிலும் 100 குழந்தைகளும் திரள்கின்றனர். பின்னர் அனைவரும் விமானத்தில் பறக்கின்றனர்.

வங்காள விரிகுடா உள்ளிட்ட சில பகுதிகள் மீது சுமார் அரை மணி நேரம் விமானம் பறக்கிறது. வானில் பறந்துகொண்டிருக்கும் போதே சூரரைப்போற்று படத்தின் ஆடியோ வெளியிடப்படுகிறது. இப்படத்தை சூர்யா தயாரித்து வருகிறார். அவரே இன்று நடக்கும் ஆடியோ விழாவுக்காக தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்புக்காக தினமும் பல லட்சங்கள் செலவில் விமானம் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


More Cinema News