தல அஜீத் படத்தை காட்டி போலீஸ் விழிப்புணர்வு.. விஸ்வாசம் ஆக்‌ஷன் காட்சி பரபரப்பாகிறது..

by Chandru, Feb 12, 2020, 17:15 PM IST

கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகி அதிக வசூல் சாதனை செய்த தல அஜீத்தின் விஸ்வாசம் படம் எல்லா சென்டர்களிலும் ஓடி முடிந்து டிவியிலும் ஒளிபரப்பாகிவிட்டது.

தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார் அஜீத். இப்படத்தை எச். வினோத் இயக்குகிறார். இப்போது அதுவல்ல விஷயம். இது சிறுத்தை சிவா இயக்கிய விஸ்வாசம் பற்றி மேட்டர். படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் தற்போது அப்படத்தில் உள்ள ஒரு காட்சியை போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கையில் எடுத்துள்ளனர்.

விஸ்வாசம் படத்தில் அஜீத், நயன்தாரா ஜோடியின் மகளாக அனிகா நடித்திருந்தார். அவரை ஒரு கூட்டம் காரில் கடத்தி செல்லும் அப்போது அந்த தகவலை தனது தாயிடம் அனிகா சொல்வார். உடனே நயன்தாரா அதனை அஜீத்திடம் சொல்ல அவர் கடத்தல்காரர்களை தாக்கி மகளை காப்பாற்றுவார். இந்த சீனை தேனி மாவட்ட போலீசார் வெளியிட்டு போலீசாரின் காவலன் செயலியை டவுன்லோடு செய்து ஆபத்து நேரங்களில் போலீசாரின் உதவியை பெறுமாறு கேட்டுக்கொண்டிருக் கின்றனர்.
போலீசாரின் இந்த செயலை அஜீத் ரசிகர்கள் நெட்டில் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.


Leave a reply