இன்ஸ்டாகிராமில் இணைந்த சிம்ரன்..

by Chandru, Feb 12, 2020, 17:17 PM IST

கமல்ஹாசன், விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த சிம்ரனுக்கு ரஜினியுடன் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. கதாநாயகியாக அவர் நடித்தபோதெல்லாம் கிடைக்காத வாய்ப்பு திருமணம் ஆகி குழந்தை பெற்றபிறகு கிடைத்தது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான பேட்ட படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார் சிம்ரன். தற்போது கதாநாயகி வேடங்களில் இல்லாவிட்டாலும் குணசித்ரம், வில்லி என வெவ்வேறு பரிமாணங்களில் நடிக்க தொடங்கியிருக்கும் சிம்ரன் ரசிகர்களுடனான தொடர்பை துண்டிக்காமல் டிவிட்டர் வாயிலாக பராமரித்து வருகிறார். அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கிறார். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு மெசேஜ் வெளியிட்டிருக்கும் சிம்ரன் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்திருப்பதாக கூறியிருப்பதுடன் அதிலும் தன்னை பின்தொடருங்கள் என அதற்கான முகவரியும் வெளியிட்டிருக்கிறார் சிம்ரன்.


Leave a reply