90களின் கதாநாயகி ரூபினி ரீ என்ட்ரி..

by Chandru, Feb 12, 2020, 17:19 PM IST

விஜயகாந்த் ஜோடியாக கூலிக்காரன் படத்தில் அறிமுகமானவர் ரூபினி. பின்னர் ரஜினியுடன் ராஜா சின்ன ரோஜா, மனிதன், கமலுடன் மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள் மற்றும் என் தங்கை படிச்சவ, பிள்ளைக்காக, நம்ம அண்ணாச்சி போன்ற பல படங்களில் நடித்தார்.

இந்தி, மலையாளம் படங்களிலும் நடித்திருக்கிறார். திடீரென்று திருமணம் செய்துகொண்டு செட்டிலானவர் அதன்பிறகு பல வருடமாக சினிமா பக்கம் தலைகாட்டவில்லை. குழந்தை, குடும்பம் என்று வாழ்கையை கழித்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ரூபினி தமிழ் திரையுலகம் பக்கம் தலைகாட்டியிருக்கிறார். அதுவும் சின்னத் திரையில் காலடி எடுத்து வைத்திருக்கி றார். ராதிகா தயாரித்து நடிக்கும் சித்தி 2 சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ரூபினி. இதுபற்றி ரூபினி கூறும்போது,'சினிமாவில் நடிப்பீர்களா என்கிறார்கள். நல்ல கதாபாத்திரம் வந்தால் சினிமாவில் நடிக்க தயார்' என்றார்.


Leave a reply