விஜயசேதுபதி மீது மதமாற்ற புகார்.. வேற வேலயிருந்தா பாருங்கடா.. நடிகர் விளாசல்

by Chandru, Feb 12, 2020, 17:26 PM IST

பீட்சா, சங்கத் தமிழின் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் இவரைப்பற்றி இணைய தளத்தில் சிலர் வதந்தி பரப்பினர்.

சென்னையில் உள்ள பெரிய கல்வி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் கிறிஸ்தவ மதத்துக்கு விஜய்சேதுபதி மாறியதாக கூறப்பட்டது. அவருடன்  ஆர்யா, ரமேஷ்கண்ணா, நடிகை ஆர்த்தி போன்றவர்களும் மதம் மாறியதாகவும் திரையுலகில் உள்ள  பலரையும் மத மாற்றம் செய்ய உதவுவதாகவும் கூறியதாக அந்த செயதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் பிகில் படத்துக்கு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த கல்வி நிறுவனத்தை சேர்ந்தவர் முதலீடு செய்ததாகவும் கடைசியில் படத்தின் வசூல் முழுவதும் அவருக்கு மாற்றப்பட்டது. அதை கண்டுபிடித்த மத்திய ஆட்சியாளர்கள்  பிகில் பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன்  போன்றவர்கள் மீது வருமான வரி துறையை ஏவி விட்டதாகவும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டிருந்தது.
இதுபற்றி தகவல் விஜய்சேதுபதி பார்வைக்கு வந்தது. அவர் ரொம்பவும் சிம்ப்ளாக, 'போயி வேற வேலயிருந்தா பாருங்கடா ..' என்று டிவிட்டரில் மெசஜே் போட்டு விளாசியிருக்கிறார்.


Leave a reply