இது பதுங்கம் புலி, சீக்கிரம் பாயும் புலி.. சூர்யா பற்றி சிவகுமார் லீக் செய்த ரகசியம்..

by Chandru, Feb 14, 2020, 20:13 PM IST

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சமீபத்தில் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்தார். அதற்கு பெரும் ஆதரவு குரல் எழுந்ததுடன் சில கட்சியினர் சூர்யாவுக்கு எதிராக கருத்து கூறினார்கள். தான் நடிக்கும் திரைப்படங்களிலும் சமீபகாலமாக அரசியல் வசனங்கள் பேசி அதிரடி காட்டுகிறார். இந்நிலையில் சூர்யாவை பதுங்கும் புலி சீக்கிரம் பாயப்போகிறார் என்று பரபரப்பாக பேசியிருக்கிறார் சிவகுமார்.

அவர் பேசியதாவது:

சூரரைப்போற்று பட ஆடியோ வெளியீட்டுக்காக  சிறப்பாக ஏற்பாடு செய்து தந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு பாராட்டுக்கள். இப்படத்தில் பணிபுரிந்திருக்கும் இயக்குனர் சுதா, சூர்யா, மோகன்பாபு, ஜிவி பிரகாஷ் அனைவருக்கும் இமாலய வெற்றி கிடைக்க வேண்டும். நான் சினிமாவில் அறிமுகமானபோது என்னுடைய குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகர் வருவார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தார் சூர்யா. தற்செயலாக அவர் நடிகரானார்.  சூர்யா எங்கள் குடும்பத்துக்கு கிடைத்த ஒரு புதையல். இப்படி ஒரு மகனை எங்களுக்கு கொடுத்த கடவுளுக்கு நான் நன்றி சொல்கிறேன். சூர்யா சைலன்டாக இருக்கின்றார் என்று நினைக்க வேண்டாம். அவர் ஒரு பதுங்கும் புலி. விரைவில் பாய்வார். சூரரைப்போற்று பட இயக்குனர் சுதாவை மணிரத்னத்திடம் அவர்  பணிபுரிந்த காலத்தில் இருந்து எனக்கு தெரியும். இப்படத்துக்கு இசை அமைத்திருக்கும் ஜி.வி. பிரகாஷ் சாதனையாளர்கள் இளையராஜா, எம் எஸ் விஸ்வநாதன் இவர்கள் வரிசையில்  இன்னும் இமயமலை அளவு உயர அவரை நான் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு சிவகுமார் பேசினார்.

சூர்யா பதுங்கும் புலி விரைவில் பாய்வார் என்று அவரது தந்தை சிவகுமார் கூறியிருப்பதை ரசிகர்கள் அரசியல் கருத்தாக பார்க்கின்றனர். விரைவில் சூர்யா அரசியலுக்கு வருவார். விஜய்யுடன் இணைந்து அவர் அரசியலுக்கு வந்தால் பெரிய மாறுதல் வரும் என தங்கள் கருத்துக்களை இணைய தளத்தில் வெளியிட்டுவருகின்றனர்.


Leave a reply