நடிகை ரைசா தனது காதலனை அறிவித்தார்.. இருவரும் இன்ஸ்டாகிராமில் லவ்வை பகிர்ந்தனர்..

by Chandru, Feb 14, 2020, 20:16 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா. அவருடன் அதே நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஹரிஷ் கல்யாண் உடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் இருவரும் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். ஹரிஷ் நடித்த தனுஷு ராசி நேயர்களே படத்தில் ரைசா கெஸ்ட் ரோலில் நடித்தார். இந்நிலையில் இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது. அதற்கு ஏற்ப ஹரிஷுடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக கூறினார் ரைசா. எதற்கும் ஹரிஷ் பதில் சொல்லாமல் மவுனம் காத்தார்.

இந்நிலையில் நேற்று ரைசா காதலர் தினத்தில் தனது காதலனை அறிமுகப் படுத்தப்போவதாக கூறினார். ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதன்படி காதலர் தினமான இன்று தனது காதலனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தினார். அவர் பெயர் வால்டர் பிலிப்ஸ். இருவரும் அருகருகே அமர்ந்து தங்கள் காதலை பரிமாறிக்கொண்டனர். காதலர் தின வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.


Leave a reply