கங்கனா நடிக்கும் ஜெயலலிதா வாழ்க்கை பட வழக்கு.. இயக்குனர் விஜய்க்கு கோர்ட் நோட்டீஸ்..

by Chandru, Feb 14, 2020, 20:10 PM IST

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை தமிழில் தலைவி என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இதில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். அதேபோல் ரம்யா கிருஷ்ணன் நடிக்க குயின் என்ற பெயரில் கவுதம் மேனன் வெப் சீரிஸ் இயக்கி வருகிறார். இதற்கு   தடை விதிக்கக் கோரி ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். தற்போது ஜெய தீபா அப்பீல் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அதில் ' மறைந்த முதல்வரும் எனது அத்தையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை பற்றி தமிழில் இயக்குநா் ஏ.எல்.விஜய் 'தலைவி'  இந்தியில் 'ஜெயா' என்ற பெயரில் ஐதராபாத்தைச் சோந்த விஷ்ணுவா்தன் இந்தூரி  படமாக உருவாக்குகின்றனர். 'குயின்' என்ற பெயரில் கவுதம் வாசுதேவ் மேனன் வெப் சீரிஸாகவும் எடுத்து வருகிறாா். இவைளுக்கு ஜெயலலிதாவின் சட்டப்பூா்வ வாரிசான என்னிடம் யாரும்  அனுமதி பெறவில்லை. எனவே, இந்த திரைப்படம், வெப்சீரிஸ்  உருவாக்க தடை விதிக்க வேண்டும்' என கோரியிருந்தார்.

இந்த  வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக்கொண்டு இது சம்பந்தமாக இயக்குநா்கள் கவுதம் வாசுதேவ் மேனன், ஏ.எல்.விஜய் மற்றும் விஷ்ணுவா்தன் இந்தூரி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.


Leave a reply