வலிமை படப்பிடிப்பில் அஜீத் படுகாயம்.. வேகமாக பைக் ஓட்டியபோது தவறி விழுந்தார்..

by Chandru, Feb 19, 2020, 19:20 PM IST

எச்.வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்த அஜீத்குமார் மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிக்கிறார் அஜீத். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

கடந்த மாதம் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. அஜீத் நடித்த அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. ஆக்‌ஷன் காட்சியில் நடித்த அஜீத்குமார் ரேஸ் பைக் ஒன்றை வேகமாக ஓட்டி வருவதுபோன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நிலை தடுமாறியதில் பைக் சாலையில் சறுக்கி உருண்டது. பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட அஜீத்திற்குத் தோள்பட்டை, கை, கால்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அதைக்கண்டு படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அஜீத்தைப் பாதுகாப்பாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்றார்.

சுமார் 5 நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர். இதையடுத்து அஜீத் வீட்டிற்குச் சென்று ஓய்வு எடுத்து வருகிறார். காயம் குணம் அடைந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அஜீத் காயம் அடைந்த தகவல் நெட்டில் பரவியதை அடுத்து #GetWellsoonThala என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிய ரசிகர்கள் அதில் அஜீத் குணம் அடைய பிரார்த்தனைகளைப் பதிவிட்டுவருகின்றனர். இதற்கிடையில் அஜீத் அடிக்கடி விடுமுறை எடுத்துக்கொள்வதால் வலிமை படப்பிடிப்பு தாமதமாகிறது என்று வந்த தகவலைப் படக்குழு மறுத்திருக்கிறது.


Leave a reply