சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு தொடங்கியது.. திரையுலகினர் வாழ்த்து..

by Chandru, Feb 19, 2020, 19:25 PM IST

சிம்பு நடிக்கும் 'மாநாடு' படப்பிடிப்பு தொடங்குமா, தொடங்காதா? என்று ஊசலாட்டத்திலேயே இதுவரை தகவல்கள் வந்துக்கொண்டிருந்தன. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று பட இயக்குநர் வெங்கட் பிரபு அடிக்கடி மெசேஜ் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி 'மாநாடு படத்தின் படப்பிடிப்பு இன்று (புதன்கிழமை) தொடங்கும் என அறிவித்தார்.

இதையடுத்து சிம்புவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து வெற்றிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தயாரிப்பாளரின் அறிவிப்புப்படி இன்று பட பூஜை தொடங்கியது. மாநாடு கதாநாயகன் சிம்பு கலந்துகொண்டார்.

மேலும் இயக்குநர் பாரதிராஜா, கலைப்புலி எஸ் தாணு , சீமான், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கலந்துகொண்டு சிம்பு உள்ளிட்ட படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிம்புவை வைத்து சீமான் படம் இயக்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் சீமான் இன்று பூஜையில் கலந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.


Leave a reply