ஜீவா நடித்த ஜிப்ஸி படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. ஆனால் இப்படம் எளிதாக ரிலீஸ் ஆகிவிடவில்லை ரிலீசுக்குமுன் தணிக்கையில் பெரும் போராட்டத்தையே நடத்தி இருக்கிறது.
இப்படத்தில் பல்வேறு கட்சிகளைத் தணிக்கை கத்தரி வெட்டி எறிந்தது. அதற்குக் காரணம் இப்படம் காவி கொடிக்கார்கள் முஸ்லிம்களைக் கலவரத்தின்போது தாக்கி கொல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது ஒரு உண்மைச் சம்பவம்தான். ஆனால் அதற்கு தரப்பட்ட வெட்டுக்கள் ஏராளம். ஒரு வருடத்துக்கு முன்பே இந்த காட்சிகள் படமாக்கப்பட்டது. அது டெல்லியில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் மீண்டும் நடந்தது. ஆனாலும் படத்தில் தற்போது இடம் பெற்றிருக்கும் காட்சிகளை பார்த்தாலே அந்த கலவரம் எவ்வளவு கொடுமையானது என்பது புரிகிறது.
'தணிக்கை குழுவில் அரசியல் கட்சியினர் இருக்கக் கூடாது. வெட்டப்பட்ட தணிக்கை காட்சிகளை நெட்டில் வெளியிடுவேன்' என இயக்குநர் ராஜு முருகன் தெரிவித்தார்.