நடிகை வரலட்சுமி ஹீரோயினாக தொடங்கி தற்போது வில்லி, குணசித்ரம் என வெவ்வேறு பரிமாணங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் தனது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். இதையடுத்து டிவிட்டரில் தொடர்பு கொண்ட ரசிகர் ஒருவர், 'ஆண்டி உங்க வயது 35 தானே' எனக் கிண்டல் செய்திருந்தார். அதற்கு வரலட்சுமி பதிலடி கொடுத்தார்.
ரசிகரின் கிண்டல் கேள்விக்குப் பதில் அளித்த வரலட்சுமி, 'ஆமாம் அங்கிள் அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? என விளாசியிருந்தார். அவரது தைரியமான பதிலுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.