நடிகர் சங்க தேர்தல் நடத்தத் தடை.. சென்னைஐகோர்ட்டு புது உத்தரவு..

Advertisement

சென்னை அபிபுல்லா சாலையில் உள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம். இச்சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி நடந்தது. பதிவான வாக்குகளை எண்ணக் கூடாது அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டதையடுத்து வாக்குகளை எண்ணக்கூடாது என ஐகோர்ட் உத்தர விட்டது. இந்நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்துக்குத் தனி அதிகாரியை நியமித்தது.



நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில் தேர்தலில் தங்களை ஓட்டுப்போட அனுமதிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அவர் பிறப் பித்த உத்தரவில் 2019-ம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்ததுடன், வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்து, நடிகர் சங்கத்துக்குப் புதிதாக நடத்த வேண்டும். 3 மாதங்களுக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து நடிகர் விஷால் ஐகோர்ட்டில் அப்பீல் மனுத் தாக்கல் செய்தார். அதனை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அப்துல் குத்தூஸ் விசாரித்தனர். பின்னர் பிறப்பித்த உத்தரவில், '3 மாதத்துக்குள் நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும், அதற்கு புதிய தேர்தல் அறிவிப் பாணை வெளியிட வேண்டும். உறுப்பினர்களை சேர்த்து புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும் நடிகர் சங்க நிர்வாகத்தைத் தனி அதிகாரி தொடர்ந்து நிர்வகிக் கலாம், உறுப்பினர் களை சேர்த்து புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கிறோம்.. இதுதொடர்பாக தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்யவேண்டும்' என உத்தர விட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் 8-ந் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>