தனித்தனி வீட்டில் கமல், ஸ்ருதி, அக்‌ஷரா அடைக்கலம்..

by Chandru, Mar 25, 2020, 14:44 PM IST

கொரோனா எச்சரிக்கை..

கொரோனா அச்சம் காரணமாக தனிமையாக இருக்கச் சொல்லி வேண்டுகோள் விடப்பட்டதுடன், ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அவரவர்கள் தங்கள் வீட்டில் தனிமையில் இருக்கின்றனர். நடிகர் கமல் குடும்பத்தில் ஒவ்வொருவரும் தனித்தனி வீடுகளில் தங்களை தனிமைபடுத்திக் கொண்டிருக்கின்றனர். இதுபற்றி நடிகை ஸ்ருதிஹாசன் கூறும்போது

கொரேனா எச்சரிக்கையை ஊதாசினப்படுத்தக்கூடாது. டாக்டர்கள் அறிவுரை பின்பற்ற வேண்டும். நான் லண்டனிலிருந்து திரும்பியிருக்கிறேன். ஆனால் தனி வீட்டில் வசிக்கிறேன். என்னுடன் யாரும் கிடையாது. எனது செல்ல பூனைக் குட்டி கிளாரா மட்டுமே இருக்கிறது. வேலைக்காரர்களைகூட அனுப்பிவிட்டேன். மேலும் எனது அம்மா (சரிகா) மும்பையில் தனி வீட்டில் வசிக்கிறார். எனது தந்தை கமல், தங்கை அக்‌ஷராவும் தனித்தனி வீடுகளில் வசிக்கின்றனர்' என்றார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் ஸ்ருதிஹாசன் லண்டனிலிருந்து இந்தியா வந்தார். கொரேனா வைரஸ் எச்சரிக்கை காரணமாக வந்த நாளிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்.


Leave a reply