மாளவிகாவின் பொறுப்பும், ஜாக்கிரதையும்..

by Chandru, Mar 25, 2020, 14:54 PM IST

அன்பானவர்களுக்காக 'மாஸ்டர்' பட நடிகை முடிவு..

லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பவர் மாளவிகா மோகனன். படப்பிடிப்பு இருந்த வரை சென்னை, மும்பை, ஐதராபாத், கர்நாடகா என சுற்றி வந்தவரை கொரோனா வைரஸ் எச்சரிக்கை அவரை வீட்டில் முடக்கிப்போட்டிருக்கிறது. மாளவிகா தன் வீட்டில் தனிமையாக இருப்பதாக கூறினார்.
'எனது அம்மா, அப்பா, சகோதரர், அன்பிற்குரியவர்கள், நெருக்கமானவர்களுக்கு நான் எடுத்திருக்கும் இந்த முடிவு கொஞ்சம் கடினமானதுதான் என்றாலும் இது இப்போதைய தேவைதான், என் வாழ்க்கையில் நான் அன்பிற்குரியவர்களுக்கு முன்னுரிமை தருகிறேன். நம் அஜாக்கிரதையும் பொறுப்பில்லா தன்மையும் மற்றவர்களை ஆபத்தில் கொண்டுசென்ற விட்டுவிடும். என்னை தனிமையில் வைத்திருக்கிறேன்' என்றார் மாளவிகா மோகன்.


More Cinema News