ரஜினி, கமலுக்கு பிறகு டிவிட்டரில் இணைந்த மெகா ஸ்டார்..

by Chandru, Mar 26, 2020, 13:27 PM IST

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் டிவிட்டரில் இணைந்து வருடக்கணக்கு ஆனபோதிலும் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி டிவிட்டர் பக்கம் தலைகாட்டாமல் இருந்தார் . ஒருவழியாக அவரும் டிவிட்டரில் இணைந்திருக்கிறார். தெலுங்கு வருடப்பிறப்பில் இந்தப் பணியை செய்திருக்கும் அவர் தனது தாயாருடன் இருக்கும் படத்தை வெளியிட்டிருக்கிறார்.


பெற்றோர்களை கவனிக்க வேண்டிய நேரமிது. உங்கள் பெற்றோருடன் புகைப்படம் எடுத்து அனுப்புகள், கொரோனா தொற்றிலிருந்து விலகி இருங்கள், வீட்டிலேயே இருங்கள் என மெசேஜும் வெளியிட்டிருக்கிறார். ஒரே நாளில் 9 டிவிட்கள் பதிவிட்டுள்ள சீரஞ்சீவிக்கு ஒரே நாளில் ஒரு லட்சத்து முப்பதாயிரத்திற்கும் மேல் அவரை பின்தொடர ஆரம்பித்திருக்கிறார்கள்.


Leave a reply